Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

சுவாதி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தாயார் மனுத்தாக்கல்!



சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த புஷ்பம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தனது மகன் ராம்குமார் நிரபராதி எனவும், உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க  விசாரணை அதிகாரி தேவராஜ் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுவாதி கொலை நடந்த அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் பலர் வீடியோ, போட்டோ எடுத்துள்ள போதிலும், அவற்றை சாட்சியங்களாக போலீசார் திரட்டுவதில் மெத்தனம் காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

எனவே இது போன்று பல முரண்பாடுகளை கொண்ட  இந்த வழக்கின் விசாரணையை நுங்கம்பாக்கம் போலீசாரிடமிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் ராம்குமாரின் தாயார் புஷ்பம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.