August 7, 2016
திருவொற்றியூர் அருகே மூதாட்டியை தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற பெண் காவலர்
திருவொற்றியூர் அருகே, மூதாட்டியை தலை முடியை பிடித்து இழுத்து சென்ற பெண் காவலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர்கள் அப்பு, ராமு. சகோதரர்களான இருவரையும் பெண் காவலர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளார். இதற்கு இருவரின் பாட்டியான கமலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது கமலாவின் தலைமுடியை, பெண் காவலர் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து பழைய லிப்ட் கேட் பகுதியில் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியல் செய்தவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் இது தொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.
திருவொற்றியூர் அருகே மூதாட்டியை தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற பெண் காவலர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.