August 4, 2016
சுவாதி கொலை வழக்கில் முகமது பிலாலிடம் மீண்டும் விசாரணை
சுவாதி கொலை தொடர்பாக அவரது நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று இந்த விசாரணை நடைபெற்றது. முகமது பிலாலிடம் ஏற்கனவே பலமுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை போலீசார் பிலாலிடம் கேட்டுள்ளனர்.
சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரே குற்றவாளி என்று போலீசார் ஆரம்பம் முதலே தெரிவித்துவந்த நிலையில், முகமது பிலாலிடம் நடைபெற்றுவரும் விசாரணை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “சுவாதியை எப்படி தெரியும்?” என்பது போன்ற ஊடகங்களின் கேள்விகளுக்கு பிலால் பதிலளிக்க மறுத்திருந்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்படுவது இவ்வழக்கில் பல்வேறு தரப்பினராலும் கூர்ந்து நோக்கப்பட்டு வருகிறது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
f
சுவாதி கொலை வழக்கில் முகமது பிலாலிடம் மீண்டும் விசாரணை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.