Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 31, 2016

எம்.எல்.ஏ. மனைவிக்குப் பிறந்த நாள் பரிசாக லம்போகினி: அடுத்த நிமிடமே விபத்தில் சிக்கியது!


'வாழ்க்கையில் ஒரு நாள் இல்ல ஒரு நாள் லம்போகினி காரை வாங்குவேன்!' பெரும்பாலான பணக்காரர்களின் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். பார்க்க படு க்யூட்டகாவும், செம ஸ்டைலாகவும் இருக்கும் அந்தக் கார்கள் சாலையில் சென்றாலே தனி அழகு.  எதிர்பாராமல் இந்த  வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொண்டால் மனசும் பதைபதைத்து விடும். புதிய காரை வாங்கி அதனை ஓட்டத் தொடங்கிய அடுத்த நிமிடமே புத்தம் புதிய லம்போகினி விபத்தில் சிக்கிய சம்பவம் மகராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது.

மும்பை அருகேயுள்ள மீரா பயந்தரை சேர்ந்தவர் நரேந்திர மேத்தா.  பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ . இவரது மனைவிக்கு நேற்று பிறந்தநாள். மனைவிக்கு சர்பரைசாக பரிசளிக்க விலை உயர்ந்த லம்போகினி காரை வாங்கி வைத்திருந்தார் மேத்தா. இதன் மதிப்பு ஐந்தரை கோடி ரூபாய். அதிகாலையில் எழுந்த அவரது மனைவி சுமான், வீட்டின் முன் புத்தம் புதிய லம்போகினி நின்று கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியமைடைந்தார். கணவரால் அளிக்கப்பட்ட பிறந்த நாள் பரிசு என அறிந்து உற்சாகத்தில் திளைத்தார். மனைவியிடம் லம்போகினியின் சாவியை அளித்துவிட்டு அதனை போட்டோ எடுத்து 'ஹேப்பி பர்த்டே சுமான்' என்று ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டு மகிழ்ந்தார் நரேந்திர மேத்தா.

லம்போகினியை எடுத்தார் அவரது மனைவி சுமான். வீட்டை விட்டு வெளியே வந்த அடுத்த நிமிடமே கார் கட்டுப்பாட்டை இழந்தது. அடுத்த விநாடி எதிரே நின்ற ஆட்டோ மீது மோதியது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். காருக்குள் எம்.எல்.ஏவும் இருந்தார். காரை ஓட்டிய, அவரது மனைவியால் லம்போகினியை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

லம்போகினிக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஆட்டோவின் முகப்பு விளக்கு உடைந்து விட்டது ஆட்டோ ஓட்டுநர் எந்த இழப்பீடும் கேட்கவில்லை. ஆனாலும் இழப்பீடுட்டுக்கு உண்டானத் தொகையை நரேந்திர மேத்தா கொடுத்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து நரேந்திர மேத்தா கூறுகையில், ''எனது மனைவிக்கு 18 வருடம் கார் ஓட்டிய அனுபவம் இருக்கிறது. ஆடி உள்ளிட்ட இறக்குமதி கார்களைக் கூட ஓட்டியுள்ளார். காரும் லேசாக சேதமடைந்துள்ளது. தற்போது அதனை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளேன்'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.