126 தமிழக வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
1961 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34(1)ல், சென்னை உயர் நீதிமன்றம் சட்டத் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளே நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்களுக்கு எதிரானது எனவும், அதை திரும்பப் பெறவேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், வழக்கறிஞர் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக்கோரி கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா தலைமையில் நடந்த இந்திய பார் கவுன்சில் கூட்ட தீர்மானத்தின்படி, தமிழக வழக்கறிஞர்கள் 126 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
சட்டத் திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதனையடுத்து வழக்கறிஞர்கள், அகில இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தி வைத்த அவர்கள் பணிக்கும் திரும்பினர்.
இந்நிலையில் தமிழக பார் கவுன்சில் முறையீட்டை அடுத்தும், வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றதாலும், 126 வழக்கறிஞர்களின் சஸ்பென்ட் உத்தரவை தற்காலிகமாக இந்திய பார் கவுன்சில் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் நன்னடத்தை உள்ளிட்ட விவரங்களை வருகின்ற 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள இந்திய பார்கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, வழக்கறிஞர்கள் மீதான தடையை முழுவதுமாக நீக்குவது பற்றி வருகின்ற 22ம் தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.