பிரபல திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீப்பொறி ஆறுமுகம் பெரியார் இருந்த போதில் இருந்து தி.மு.க.வில் இருந்து வந்தவர். சில கசப்பான காரணத்தால் வேறுகட்சிக்கு சென்று மீண்டும் அழகிரி மூலம் தனது தாய் கட்சியான தி.மு.க.வில் இணைந்தவர். அண்ணாவால் தீப்பொறி என்ற சிறப்பு அடைமொழியையும் பெற்றவர். கருணாநிதி, முரசொலிமாறன் போன்றவர்களின் அன்பையும் பெற்று மேடைகளில் தீப்பொறி பறப்பது போல தனது பேச்சுவாளை வீசியவர். தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் அவரை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து நலம் விசாரித்தும் பண உதவிகளும் செய்து வந்தனர். திருச்சி சிவா 50 ஆயிரம் கொடுத்தார்.
15 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகத்தை இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது மருத்துவ உதவிக்கு 1 லட்ச ரூபாய் வழங்கினார். மேலும், தீப்பொறி ஆறுமுகத்தின் நலனை பற்றியும் விசாரித்து சென்றார்.

ஸ்டாலின் நலம் விசாரித்தது குறித்து தீப்பொறி ஆறுமுகம் கூறுகையில், "தம்பி ஸ்டாலின் வந்து என்னை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகிப்பதால் அவருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். இதற்கிடையே, சட்டமன்ற பிரச்னை, பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று தொடர் வேலையிலும் என் உடல் நிலை பற்றி விசாரித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் என்னை பார்த்தபின் எனக்கு புது தெம்பு கிடைத்தார் போல் உள்ளது. தலைவர் கலைஞர் என் உடல்நிலையை பற்றி கேட்டதாக ஸ்டாலின் சொன்னார். விரைவாக குணமடைந்து விடுவேன் என்று நினைக்கிறேன். தற்போது வெளியாகியுள்ள ஜூனியர் விகடனில்கூட ஸ்டாலின் என்னை பார்க்க வருவார் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதற்கிடையே தம்பி ஸ்டாலின் என்னை பார்க்கவந்து என் மனதிற்கு ஆதரவாக இருக்கிறது" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.