Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

32 தமிழர்களை விடுவிக்க முடியாது! - சந்திரபாபு நாயுடு கைவிரிப்பு


நகரி: ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களை விடுவிக்க முடியாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழர்களை கைது செய்த போலீசார், அவர்களை ஆந்திர மாநில சிறையில் அடைத்து உள்ளனர்.

மேலும், அவர்கள் மீது ஆந்திர மாநில போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கைதான 32 தமிழர்களும் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருந்தார்.

அது மட்டுமின்றி 32 தமிழர்கள் கைது விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. எழுப்பியது. மேலும், 32 தமிழர்களை மீட்பதற்கு உதவும் வகையில் 2 வழக்கறிஞர்களையும் நியமனம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய இயலாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குப்பம் வந்திருந்த அவர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறும்போது, ''சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன. அதை அனுமதிக்க இயலாது. செம்மரக் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கைதானதமிழர்கள் அப்பாவிகள் அல்ல; அவர்கள் நல்லவர்கள் என்று நியாயப்படுத்த முடியாது. செம்மரம் வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 32 தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்ய இயலாது. இது பற்றி ஆந்திர அரசு, தமிழக அரசுக்கு உரிய விளக்கத்தை அளிக்கும்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.