Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

நீங்கள் சரியான வேலையில் தான் இருக்கிறீர்களா? இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!


அனைவருமே ஏதோ ஒரு வேலையில் தங்களை நிலைநிறுத்தி, தன்னை பொருளாதார ரீதியாக ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதேசமயம் நாம் செய்யும் வேலை நமக்கு ஒரு திருப்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் சரியான வேலையில் தான் உங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்பதை இந்த மூன்று கேள்விகள் உங்களுக்கு விளக்கும்.

நீங்கள் சவாலுக்கு தயாரா?

உங்களுக்குத் தரப்பட்டுள்ள வேலையில் 60-75 % முழுமையான ஈடுபாடுடன் இருக்கிறீர்கள் என்று வைத்து கொண்டால், உங்கள் வேலையில் இன்னும் சவாலை அதிகரிக்க நீங்கள் தயாரா என்பது தான் கேள்வி, அதுமட்டுமின்றி இந்தச் சவாலை உங்களை சிரமப்படுத்தி கொள்ளாமல் எப்படி எதிர் கொண்டு இலக்கை அதிகரிக்கிறீர்கள் என்பது தான் சவால். இந்த வேலையில் உங்களால் இதனைச் செய்ய முடியும் என்றால் சரி, இல்லை என்றால் வேறு வேலை உங்களைத் தேடுகிறது என்று அர்த்தம்.

நீங்கள் முழுமையாக உணர்கிறீர்களா?

உங்கள் வேலை உங்களை உற்சாகப்படுத்துகிறதா? நீங்களாகவே உங்கள் வேலையால் புத்துணர்ச்சியடைகிறீர்களா? இதற்கெல்லாம் இல்லை என்ற பதில் இருந்தால், ஆம் என்ற பதில் தரும் வேலையைத் தேடலாம். ஆம் என்றால் உங்களை வெற்றி மட்டுமே நெருங்கும் என்ற கூடுதல் மகிழ்ச்சியுடன் வேலையைத் தொடருங்கள்.

உங்கள் சூழல் எப்படி இருக்கிறது?

நீங்கள் செய்யும் வேலைக்கு உங்களது சூழல் சரியான ஒத்துழைப்பை தருகிறதா? நீங்கள் செய்யும் வேலைகள் அங்கீகரிக்கப்பட்டு, நீங்கள் பட்டியலில் முந்துகிறீர்களா? நீங்கள் செய்யும் வேலைகளால் உங்கள் பணி பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது என்று நம்பினால் நீங்கள் கில்லி பாஸ்.

இந்த மூன்று கேள்விகளின் பதிலுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால் உங்கள் வேலையில் நீங்கள் செம கெத்தாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லை என்றால் உங்கள் வேலை இதுவல்ல, உங்களை ஆம் என்று கூற வைக்கும் வேலை உங்களுக்காக வெயிட்டிங் பாஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.