முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் தூக்கத்தைக் கெடுத்த இஸ்ரோ ஊழல் தொடர்பாக, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டது சி.பி.ஐ. ' ஒப்பந்தத்தின் குளறுபடிகளுக்குக் காரணமான ராதாகிருஷ்ணன் தப்பித்துவிட்டார். மாதவன் நாயர் வகையாகச் சிக்கிக் கொண்டார்' என்கின்றனர் இஸ்ரோ அதிகாரிகள்.
இஸ்ரோ நிறுவனத்தின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன், தேவாஸ் கம்பெனி செய்து கொண்ட ஒப்பந்தத்தால், '2.32 லட்சம் கோடி இழப்பு' என சி.ஏ.ஜி அறிக்கை வெளியானபோது, எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு களத்தில் இறங்கின.
இதையடுத்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது சி.பி.ஐ. இந்த விவகாரத்தில் தொடர்புடைய இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மற்றும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த கே.ஆர்.ஸ்ரீதர் மூர்த்தி, தேவாஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஸ்வநாதன், தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தின் இயக்குநராக இருந்த எம்.ஜி.சந்திரசேகர் ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றன. இவர்களோடு, விண்வெளித் துறையின் முன்னாள் கூடுதல் செயலர் வீணா எஸ்.ராவ், இஸ்ரோவின் இயக்குநராக இருந்த பாஸ்கர் நாராயண் ராவ், தேவாஸ் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களான டி.வேணுகோபால், எம்.உமேஷ் ஆகியோரும் வகையாகச் சிக்கியுள்ளனர். இவர்கள், 'ஆதாயம் அடைவதற்காகத் திட்டமிட்டு குற்றச் சதியில் ஈடுபட்டனர். இதற்கு அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்தனர்' எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளது சி.பி.ஐ.
ஆனால் சி.பி.ஐ தெரிவிக்கும் குற்றச்சாட்டை மறுக்கும் மாதவன் நாயர், " 'தேவாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தால் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை' என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நிபுணர் குழு அறிக்கை அளித்துவிட்டது. இதை அறியாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது வியப்பை அளிக்கிறது. ஒப்பந்தத்தை நீக்கிய விதம் சரியில்லை என்றுதான் குற்றம் சுமத்தினார்கள்" என விளக்கம் அளித்தார்.
' ஒப்பந்தம் தவறு என முடிவான பிறகு, அந்த ஒப்பந்தத்தை நீக்குவதில் குளறுபடிகளைச் செய்தவர் ராதாகிருஷ்ணன். தேவாஸ் நிறுவனத்தைக் காப்பாற்றும்விதமாகவே அவர் செயல்பட்டார். அவரைத் திட்டமிட்டு தப்ப வைக்கிறது மத்திய அரசு. இதன்பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவும் இருக்கிறது' என்கின்றனர் இஸ்ரோ அதிகாரிகள்.
' சி.பி.ஐ பார்வை எப்போது வேண்டுமானாலும் தன்பக்கம் திரும்பலாம் என்பதற்காகத்தான், பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நாள் முதலாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார் ராதாகிருஷ்ணன்' எனவும் அவர்கள் அதிர வைக்கின்றனர்.
இது தொடர்பாக இஸ்ரோவில் பணியாற்றிய அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
" தேவாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் பலர் இஸ்ரோவில் பணியாற்றியவர்கள். இவர்கள் மூலமாக ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு தேவாஸ் நிறுவனத்திற்கு செயற்கைக்கோள் வழங்கப்படுவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ' இதன்மூலம் தேவாஸ் மட்டுமே கொள்ளை லாபம் அடையும். ஆன்ட்ரிக்ஸ் நஷ்டம் அடையும்' என ராதாகிருஷ்ணனின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர் அதிகாரிகள். ஆனா அதை ஒரு பொருட்டாகவே ராதாகிருஷ்ணன் எடுத்துக் கொள்ளவில்லை. தேவாஸ் ஒப்பந்தம் குறித்து சி.ஏ.ஜி கேள்வி எழுப்பியபோதும், அவர் கண்டுகொள்ளவில்லை. 'இதில் தவறு நடந்திருக்கிறது' என உறுதியாகத் தெரிந்தவுடன், தேவாஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து, சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிட்டது தேவாஸ். வழக்கின் முடிவில் நான்காயிரம் கோடி அபராதத்தை இஸ்ரோவுக்கு விதித்தது தீர்ப்பாயம். இதுதொடர்பான வழக்கில், இஸ்ரோ சார்பில் ஒருவருமே ஆஜராகவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. தீர்ப்பாயத்தில் கிடைத்த அவமானத்தை அடுத்தே சி.பி.ஐ வளையம் இறுகியது. இந்த வழக்கில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் பலரும் சிக்கியுள்ளனர். ஆனால், ராதாகிருஷ்ணன் செய்த மாயங்கள் எதையும் சி.பி.ஐ கண்டு கொள்ளவில்லை" என ஆதங்கப்பட்டார்.
" தேவாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்படுவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் மாதவன் நாயர் மட்டும்தான். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு அவர்தான் காரணம். அவர் நினைத்திருந்தால் தேவாஸ் நிறுவனத்தை தவிர்த்திருக்கலாம். எனவேதான், அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ. இதில் ராதாகிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்கின்றனர் அதிகாரிகள் சிலர்.
தேவாஸ் நிறுவனத்தின் சர்வதேச தொடர்புகளை தீவிரமாகக் கண்காணித்து வரும் சி.பி.ஐ, ' இன்னும் சில முக்கிய விஞ்ஞானிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள்’ என அதிர வைக்கின்றது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.