Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 2, 2016

குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்தி பென் விலகல்!- முகநுால் மூலம் தகவல்!


குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்தி பென் பட்டேல் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

''இது தொடர்பாக 2 மாதத்திற்கு முன், பாரதிய ஜனதா கட்சித் தலைமைக்கு முதல்வர் பதவியில் இருந்து விலக அனுமதிக் கோரி கடிதம் எழுதினேன். 2 மாத காலம் பொறுத்துக் கொள்ளும்படி  தலைமை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, பதவியில் தொடர்ந்தேன். இந்த நிலையில் இன்று மீண்டும் பதவி விலகக் கோரி அனுமதி கேட்டேன். இப்போது கட்சித் தலைமை அனுமதித்துள்ளது. அதனால் எனது ராஜினாமாவை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளேன்'' என ஆனந்தி பென் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனந்தி பென் பட்டேல், குஜராத்தின் முதல் பெண் முதல் அமைச்சர். பிரதமர் மோடி பிரதமரானதையடுத்து,  குஜராத்தின் முதல்வர் ஆனார். நவம்பர் 21ம் தேதியுடன் ஆனந்தி பென்னுக்கு 75 வது வயது பிறக்கிறது. வயது முதிர்வு காரணமாக அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.