பல்வேறு வழக்குகள் தொடர்பாக குஜராத் போலீசார் கைது செய்திருந்த சொராபுதீன் ஷேக் என்பவர் கடந்த 2005–ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இது போலி என்கவுண்ட்டர் எனக்கூறி மாநிலத்தின் அப்போதைய உள்துறை மந்திரியும், தற்போதைய பா.ஜனதா தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அமித்ஷாவை விடுவித்தது. இந்த தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஹர்ஷ் மந்தர் என்ற சமூக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்குரிமையில் தலையிட மனுதாரருக்கு உரிமையில்லை எனக்கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஒருவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவராக இருந்தால் இந்த விவகாரம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தமில்லாத ஒருவர் கோர்ட்டை அணுகுவது தவறு என்றும் கூறினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.