Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 31, 2016

’விலகிப்போங்க அது உங்கள நோக்கித் தான் வருது’ - பத்திரிகையாளர்களை காப்பாற்றிய மோடி !


பிரதமர் மோடியின் முன்னெச்சரிக்கை உணர்வால், இன்று குஜராத்தில்  அணை திறப்பு விழாவில் நடக்க இருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பத்திரிகையாளர் பலர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார் குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல்.

குஜராத் மாநிலம் சனோசாராவில் இன்று(செவ்வாய்க்கிழமை) அணைதிறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்து மோடி வந்திருந்தார். 2012ல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது 12,000 கோடி மதிப்பிலான SAUNI நீர்பாசனத் திட்டத்தைக் கொண்டு வந்தார். செளராஷ்ட்ரா பகுதி விவசாய நிலங்களுக்காக நர்மதா ஆற்றிலிருந்து நீரை தேக்கிப் பயன்படுத்தும் இந்தத் திட்டம், மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்று. இதன் மூலம் அந்தப் பகுதியில் இருக்கும் 115 அணைகள் நீர் பாசன வசதி பெறும்.


இன்று அதன் முதற்கட்ட திறப்புவிழாவில் மோடி கலந்து கொண்டார். நீர் வெளியேறுவதற்கான பட்டனை அழுத்திவிட்டு, அதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் அணைக்குக் கீழே  நின்று, போட்டோகிராபர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதை கவனித்தார். உடனே கைதட்டி சைகை மூலம் அவர்களை அங்கிருந்து சீக்கிரம் வெளியேறும்படி சொன்னார்.

அப்போது தான் போட்டோகிராபர்கள் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதைக் கவனித்தார்கள். உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இல்லாவிட்டால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.