Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

துபாயில் எப்போது விமான சேவை சீராகும்: விமான நிலைய இயக்குநர் விளக்கம்


துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விரைவில் முழுவீச்சில் அனைத்துப் பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக இயக்குநர் பால் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார். வியாழன் அன்று திருவனந்த புரத்தில் இருந்து 300 பேருடன் பயணித்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வி‌மானம் துபாயில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றியது. இதில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியின் போது வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

முறையாகத் தரையிறங்க முடியாமல் போனதன் காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே விமான விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்தை சீர் செய்யும் பணி துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாளில் இயல்பான போக்குவரத்து தொடங்கும் என்றும் விமான நிலைய தலைமை நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். விமான விபத்தால் 242 சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், 64 விமானங்கள் வேறு நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 19ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.