Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 5, 2016

பிரான்ஸ் தெருக்களில் ஆறாக ஓடிய திராட்சை மது


பிரான்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது துறைமுக நகரமான சிடி. இங்குள்ள மெரிசெல் அவின்யூ பகுதியில் திடீரென்று நறுமணம் வீசும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இது அங்குள்ள பல தெருக்களிலும் பரவியது. தெருக்களில் எல்லாம் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரின் வாசம் திராட்சை மதுவுக்கு ஒப்பானதாக இருப்பதை அறிந்த மக்கள் பின்னர் அதை உறுதியும் செய்தனர்.

இந்த திராட்சை மது பல பகுதிகளில் அமைந்துள்ள வாகன நிறுத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நிரம்பியதை அடுத்து குறிப்பிட்ட பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் தெருக்களில் பெருக்கெடுத்த திராட்சை மதுவை குழாய் வைத்து அப்புறப்படுத்த ஒரு மணி நேரத்திற்கும் அதிக நேரமாகியுள்ளது.

இதனிடையே சம்பவப்பகுதிக்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரோன் எஸ்.ஏ என்பவருக்கு சொந்தமான திராட்சை மது ஆலையில் இருந்து இந்த மது பெருக்கெடுத்துள்ளதாக தெரிய வந்தது.

அந்த ஆலையில் வைக்கப்பட்டிருந்த 5 பெரிய தொட்டிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த மதுவை மர்மநபர்கள் சிலர் திறந்து விட்டுள்ளது விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. பெருக்கெடுத்த திராட்சை மதுவின் அளவு 50,000 லிட்டர் என கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ள நிலையில், அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள், இது திட்டமிட்ட சதி எனவும், ஆலையின் காப்பாளர் இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ளதாகவும், கறுப்பு உடை அணிந்த 20-கும் அதிகமானோர் இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இச்சம்பவத்தில் அதிரடி திருப்பமாக, பிரான்சின் திராட்சை மது உற்பத்தியாளர்கள் அமைப்பின் நிழல் குழு இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்த குழுவானது பிரான்சில் திராட்சை மது தொடர்பான பல்வேறு தாக்குதல்களில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகின்றது. வெளிநாடு திராட்சை மது வகைகள் பிரான்சில் சுலபமாக கிடைப்பதால் பிரான்சில் பரம்பரையாக நடைபெற்றுவரும் திராட்சை மதுவின் விலை கடுமாயான சரிவை சந்தித்துள்ளதே இவர்களின் கோபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பெயினில் இருந்து 5 லாரிகளில் கொண்டுவரப்பட்ட திராட்சை மதுவை கடத்தி விட்டு இந்த கும்பல் அதற்கு நிகரான 90,000 பாட்டில் தண்ணீரை நிரப்பி அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.