Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 18, 2016

வேலை நேரத்தில் கம்யூட்டரில் உற்சாகமாக சினிமா பார்த்த ஊழியர் துணை முதல் மந்திரி கண்டிப்பு


டெல்லி துணை முதல் மந்திரி மனீஷ் சிசோடியா அரசு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டார் அப்போது ஒரு ஊழியர் தனது வேலை செய்யும் கம்யூட்டரில் சினிமா படம் பார்த்து கொண்டு இருந்து உள்ளார்.அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அந்த மருத்துவமனை ஊழியர் மிகவும் உற்சாகமாக அந்த சினிமாவை பார்த்து கொண்டு இருந்து உள்ளார்.ஆனால்  அதிகமான நோயாளிகள் வெளியே காத்து கொண்டு இருந்தனர்

இதை பார்த்த சிசோடியா ஊழியரை எச்சரிக்கை செய்து உள்ளார்.  இங்கு  பொறுப்பாளி யார்? நீங்கள் சினிமா பார்க்கவா இங்கு வந்தீர்கள் என கேட்டு உள்ளார்.அவரது நடத்தை தொடர்பாக மூத்த அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.நாங்கள்  உங்களுக்கு கம்யூட்டர் வழங்கி உள்ளது வேலை செய்ய வேலை நேரத்தில் சினிமா பார்ப்பதற்கு அல்ல என அந்த ஊழியரை கண்டித்து உள்ளார்.

இந்த வீடியோ தற்போது ஆம் ஆத்மி கட்சியின் பேஸ்புக்கில் வெளியிடபட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர்  ஆதரவு கருத்தை வெளியிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.