Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 28, 2016

தந்தையின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த சிறுவன் கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்


உளுந்தூர்பேட்டை அருகே தந்தையின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க சிறுவன் பிச்சை எடுத்தான். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இறப்பு சான்றிதழ்
உளுந்தூர்பேட்டை ம.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. கூலி தொழிலாளி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணமடைந்த கொளஞ்சியின் குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் தொகையான ரூ.12 ஆயிரத்து 500 வந்ததாக தெரிகிறது. இதை பெற கொளஞ்சி குடும்பத்தினர் முயன்ற போது, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து இறப்பு சான்றிதழ் தேவைப்பட்டது.

இதையடுத்து கொளஞ்சி குடும்பத்தினர் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று இறப்பு சான்றிதழ் கேட்டனர். அப்போது தனக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் சான்றிதழ் தருகிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறியதாக தெரிகிறது. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களால் இந்த பணத்தை கொடுக்க முடியவில்லை.

பிச்சை எடுத்த சிறுவன்
இந்த நிலையில் கொளஞ்சியின் இளைய மகன் அஜீத்குமார்(வயது 15) கிராமத்தில் திடீரென பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். அதாவது, தந்தையை இழந்து தவிக்கும் தனது குடும்பத்திற்கு, அரசின் நிதி உதவியாக ரூ.12 ஆயிரத்து 500 வந்துள்ளது. இதை பெற தேவையான இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் கிராம நிர்வாக அலுவலர், தன்னிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்.

எனது குடும்பம், மிகுந்த ஏழ்மையில் உள்ளதால் இந்த பணத்தை என்னால் கொடுக்க முடியாது. எனவே கிராம நிர்வாக அலுவலர் கேட்கும் பணத்தை கொடுப்பதற்கு தனக்கு பிச்சை தாருங்கள் என்று கூறி, ம.குன்னத்தூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தான். சிறுவனின் இந்த நூதன போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணி இடைநீக்கம்
இந்த நிலையில் நேற்று திருநாவலூர் போலீசார் கிராமத்துக்கு சென்று அஜீத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ம.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் ம.குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலராக நாகராஜ் என்பவர் செயல்படுவார் என்றும் தாசில்தார் ராஜேந்திரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.