கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய், தக்காளி தலா ரூ.8–க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகள் விலை வீழ்ச்சி
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் காய்கறிகள் விலை உயர்ந்து இருந்தது. அதன்பின்னர், காய்கறிகள் விலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மீண்டும் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒரு நேரத்தில் விலை உச்சத்தில் இருந்த தக்காளி, முருங்கைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலை தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. குறிப்பாக தக்காளி, வெண்டைக்காய் விலை படுவீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த 2 காய்கறிகளும் ஒரு கிலோ ரூ.8–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:–
வாங்கும் சக்தி குறைவு
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்து காணப்பட்ட காய்கறிகள் அனைத்தும் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி, வெண்டைக்காய் ஆகியவற்றின் விலை அதிகளவில் குறைந்துள்ளது. வரத்து ஓரளவு தேவைக்கு ஏற்ப மார்க்கெட்டுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், மக்களிடம் வாங்கும் சக்தியும் பெருமளவில் குறைந்துவிட்டது. இந்த 2 காரணங்களால் தான் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 210 முதல் 230 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்னும் 15 முதல் 20 நாட்களுக்கு நீடிக்கும். அதன்பிறகு விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம்(ஒரு கிலோ) வருமாறு:–
விலை பட்டியல்
கத்தரிக்காய் – ரூ.15 முதல் ரூ.20 வரை, வெண்டைக்காய் – ரூ.8, உருளைக்கிழங்கு – ரூ.25, பல்லாரி – ரூ.15 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் – ரூ.10 முதல் ரூ.15 வரை, அவரைக்காய் – ரூ.30, நூக்கல் – ரூ.20, சவ்சவ் – ரூ.15, பீட்ரூட் – ரூ.10, முட்டைக்கோஸ் – ரூ.20, மிளகாய் – ரூ.25 முதல் ரூ.40 வரை, இஞ்சி (பழையது) – ரூ.60, இஞ்சி (புதியது) – ரூ.20 முதல் ரூ.25 வரை, கோவைக்காய் – ரூ.20, காலிபிளவர் – ரூ.20, வெள்ளரி – ரூ.20, புடலங்காய் – ரூ.20, தக்காளி – ரூ.8 முதல் ரூ.10 வரை, முருங்கைக்காய் – ரூ.40, சாம்பார் வெங்காயம் – ரூ.20 முதல் ரூ.30 வரை, சேனைக்கிழங்கு – ரூ.25, சேப்பக்கிழங்கு – ரூ.25, முள்ளங்கி – ரூ.20, சுரைக்காய் – ரூ.8 முதல் ரூ.10 வரை, பீர்க்கங்காய் – 20, தேங்காய் (காய் ஒன்று) – ரூ.8 முதல் ரூ.15 வரை, வாழைக்காய் (காய் ஒன்று) – ரூ.10. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.