Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 23, 2016

ரூ.1,500 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற கன்டெய்னர் லாரிகள் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் ரூ.1,500 கோடி பணத்துடன் நடுவழியில் நின்ற கன்டெய்னர் லாரிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

2 கன்டெய்னர் லாரிகள்

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு கொண்டு செல்வதற்காக 2 கன்டெய்னர் லாரிகளில் கோடிக்கணக்கில் பணம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன. இந்த லாரிகளுக்கு முன்னும், பின்னும் 2 கார்களில் மத்திய அரசின் பாதுகாப்பு படையினர் உடன்வந்தனர்.

இந்த 2 கன்டெய்னர் லாரிகளும் நேற்று காலை 8 மணியளவில் மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே வந்தன. அப்போது அங்குள்ள ஓட்டலில் காலை உணவருந்த, அந்த வாகனங்கள் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டன. பின்னர் டிரைவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த ஓட்டலில் சாப்பிட்டனர். தொடர்ந்து அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாகினர்.

போலீஸ் பாதுகாப்பு

அப்போது ஒரு கன்டெய்னர் லாரி மட்டும் புறப்பட முடியாமல் பழுதாகி நின்றது. டிரைவர் எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை. எனவே மற்றொரு லாரியும் அங்கிருந்து புறப்படாமல் நிறுத்தப்பட்டது. உடனே உடன்வந்த மத்திய பாதுகாப்பு படையினர், அந்த கன்டெய்னர் லாரியை சுற்றி பாதுகாப்புக்கு நின்றனர்.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரிக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மதுரையில் உள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.1,500 கோடி பணம்

அந்த வாகனம் அருகில் பிற வாகனங்களையோ, ஆட்களையோ வரவிடவில்லை. இதனால் அந்த பக்கமாக சென்றவர்களுக்கு ஏன் போலீசார் இவ்வளவு கெடுபிடி செய்கின்றனர் என்ற சந்தேகம் எழுந்தது.

மதுரையில் இருந்து என்ஜினீயர்கள் வந்து நீண்டநேர போராட்டத்திற்கு பின் அந்த வாகன பழுதை நீக்கினர். சுமார் 4.30 மணி நேரத்திற்கு பிறகு, பகல் 12.30 மணியளவில் அந்த கன்டெய்னர் லாரிகள் புறப்பட்டு சென்றன.

2 கன்டெய்னர் லாரிகளிலும் தலா ரூ.750 கோடி வீதம் மொத்தம் ரூ.1,500 கோடி அளவுக்கு பணம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.