Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 10, 2016

தண்ணீரில் மூழ்கிய மனைவியை காப்பாற்றி முதலுதவி அளித்த வாலிபரை கொலை செய்த கணவர்


ரஷ்யாவில் உள்ள உலகின் ஆழமான ஏரிகளில் ஒன்றான சைபீரியாவின் பைக்கால் ஏரியில் 51 வயது மதிக்க தக்க நபரும்  அவரது மனைவியும் மது குடித்து விட்டு ஏரியில் நீந்தி  கொண்டிருந்தனர்.  கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவரது மனைவி ஆழமான பகுதிக்குச் என்று காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்த இளைஞர் குழு ஒன்று அவரது கணவருக்கு உதவி செய்து பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.

பின்னர், மயக்க நிலையில் இருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் செயற்கை மூச்சு கொடுத்து காப்பாற்றியுள்ளார். இதனை கண்ட போதை கணவர் அவர்களை தள்ளிவிட்டு சத்தம் போட்டுள்ளார்.

பின்னர், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார், இளைஞர்கள் அவரிடமிருந்து கத்தியை வாங்க முற்பட்டபோது, அவர் இரண்டு இளைஞர்களை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், ஒருவருக்கு இடுப்பிலும் மற்றொருவருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால், இடுப்பில் காயம் ஏற்பட்ட 27 வயது இளைஞனுக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி கணவரை சார் கைது செய்து நடத்திய விசாரணையில், சுய பாதுகாப்பிற்காக இளைஞர்களை குத்தியதாக கூறியுள்ளார்.

எனினும், போலீசார்வர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவருக்கு 15 ஆண்டு வரை சிறைதண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.