புதுடெல்லி:
நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், நடிகர் அமீர் கானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மனோகர் பாரிக்கர் “ஒரு நடிகர், தனது மனைவி நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக கூறினார். இது ஆணவ பேச்சு. இது போல் யாராவது பேசத் துணிந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இது குறித்து மக்களிடம் எடுத்து கூற ஒரு அணி செயல்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.
மனோகர் பாரிக்கரின் இந்த பேச்சுக்கு பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கமியூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி, நாட்டில் பாதுகாப்பின்மையை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.
காங்கிரசின் குலாம் நபி ஆசாத் பேசும்போது, ‘அவர் என்ன மாதிரியான பாடத்தை கற்றுக்கொடுக்கப் போகிறார்? என்பதை நான் தெரிந்துக்கொள்ளலாமா? ஒட்டுமொத்த நாடும் அதை தெரிந்துக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
மந்திரிகளின் பொறுப்பற்ற பேச்சுகள் பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.