Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 2, 2016

2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ரகானே சதம், இந்தியா 500 ரன்கள் குவித்து டிக்ளேர்


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 196 ரன்னில் சுருண்டது. பிளாக்வுட் 62 ரன் எடுத்தார். அஸ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து இருந்தது. ராகுல் 75 ரன்னும், புஜாரா 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ராகுல் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 182 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். 6-வது டெஸ்டில் விளையாடும் ராகுலுக்கு இது 3-வது சதமாகும். ராகுல் 158 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்து இருந்தது.

இன்று தொடர்ந்து விளையாடி இந்தியா, 9 விக்கெட்களை இழந்து 500 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ராகனே 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

304 ரன்கள் பின் தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கவுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.