பெங்களூருவில், ராணுவத்துக்கு எதிராக கோஷம் போட்டவர் களை கைது செய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
ராணுவத்துக்கு எதிராக கோஷம்
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 13–ந் தேதி நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெங்களூருவில் வசிக்கும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் ராணுவத்துக்கும், ராணுவ வீரர்களுக்கும் எதிராக சிலர் கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் வெளியானதும், ராணுவத்துக்கு எதிராக கோஷம் போட்டவர்களை கைது செய்யக்கோரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவ–மாணவிகள் மறுநாள் அந்த கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். ராணுவத்துக்கு எதிராக கோஷம் போட்டவர்கள், கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனம், கல்லூரி நிர்வாகம் மீது ஜே.சி.நகர் போலீசில் புகாரும் கொடுத்தனர்.
மாணவர்கள் மீது தடியடி
போலீசார் நேற்று முன்தினம் அந்த தொண்டு நிறுவனம் மற்றும் கோஷங்கள் போட்டவர்கள் மீது தேசதுரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. அவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும், கட்டுப்பாட்டை மீறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றார்கள். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சிலர் போலீஸ் வாகனத்தின் மீது ஏறி கோஷம் போட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். சில மாணவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல முயன்றபோது மற்றவர்கள் அந்த வாகனத்தை மறித்து மாணவர்களை மீட்க முயன்றதால் மீண்டும் போலீசார் தடியடி நடத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ரோட்டில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீஸ் அதிகாரி விரைந்துவந்து ராணுவத்துக்கு எதிராக கோஷம் போட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததன்பேரில் அவரிடம் புகார் மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.