புதுடெல்லி/இஸ்லாமாபாத்,
காஷ்மீர் சுதந்திரம் அடையும் வரையில் போராட்டம் தொடரும் என்று பாகிஸ்தான் கூறிஉள்ளது.
பாகிஸ்தான் இன்று தனது 70-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது. ஏற்கனவே காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை நுழைய செய்து அங்கு அமைதியின்மையை தொடரச்செய்த பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்தது. மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இந்நிலையில் மீண்டும் எப்போதும் போல காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பிஉள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய அந்நாட்டு தூதர் அப்துல் பாசித் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வருட சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்காக சமர்பிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வெற்றியடையும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுத்து வருகிறோம். எங்களுடைய ஆதரவு தொடரும். “காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைக்கும் வரையில் எங்களுடைய போராட்டம் தொடரும்’ காஷ்மீர் மக்களின் தியாகம் வீண்போகாது,” என்று கூறிஉள்ளார்.
இருநாட்டு உறவு ஏற்கனவே மோசமாகிஉள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திஉள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தூதர் இக்கருத்தை தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் ஹுசைன் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். சுதந்திர தினவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை அடுத்து உரையாற்றிய மம்முன் ஹுசைன், சுதந்திர தினநாளில் மக்கள் காஷ்மீர் விவகாரத்தை மறந்துவிடக்கூடாது என்றார். ”பாகிஸ்தான் காஷ்மீரிகளை மறக்க முடியாது, பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை காஷ்மீரில் செயல்படுத்த,” என்றார். பயங்கரவாதிகள் எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தானின் சுதந்திர தினவிழா பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.
இவ்விழாவில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப், மற்றும் மாகாண முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தானில் செல்போன் சேவைகள் அனைத்தும் முக்கிய நகரங்களில் இன்று தடைசெய்யப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.