ரியோ ஒலிம்பிக்கில் நேற்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா 163.8 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்து பதக்கம் வாய்ப்பை இழந்தார்.
இதையடுத்து, துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அபினவ் பிந்த்ரா அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு நிதானமாகவும், புன்னகையுடனும் அபினவ் பிந்த்ரா பேட்டியளித்தார்.
‘இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் என்னுடைய திறமையை சிறந்த முறையில் வெளிப்படுத்தினேன். இருந்தாலும் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை இழந்தது சற்று வருத்தமளிக்கிறது. போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
என்னுடைய எதிர்காலத்தை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக எனது வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கில் கூட துப்பாக்கியை தொட மாட்டேன்’ என்றார்.
ஓய்வையடுத்து பயிற்சியாளராக இருப்பிர்களா? என்ற கேள்விக்கு, ‘ஒருவேளை நான் பயிற்சியாளரானால், என்னிடம் பயிலும் மாணவர்கள் இரண்டே மணிநேரங்களில் ஓடிவிடுவார்கள், என்னுடைய அமைப்பின் மூலம் துப்பாக்கி சுடுதலில் இளம் வீரர்களுக்கு ஏற்கனவே சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் கடுமையாக உழைத்து கொண்டு இருந்தால் நிச்சயம் ஒருநாள் வெற்றி வந்து சேரும்’ என்றார்.
துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, ‘பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்தமுறை ஒலிம்பிக் போட்டியில் ஒரு பத்திரிகையாளனாக கூட வருவேன், யாராவது எனக்கு வேலை கொடுப்பீர்களா?’ என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

அபினவ் பிந்த்ரா கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்க பதக்கமும், காமன்வெல்த் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதும், ஒலிம்பிக் போட்டிகளில், தனிப்பட்ட வீரராக கலந்து கொள்ளும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அபினவ் பிந்த்ரா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.