ரியோ: அமெரிக்காவின் சாதனை நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தனது 19வது தங்கப்பதக்கத்தை பெறுவதற்கான போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். இந்த பதக்கம் எந்த அளவுக்கு பிரபலமானதோ அந்த அளவுக்கு மைக்கேலின் தோள்பட்டையிலும் முதுகிலும் வட்ட வடிவத்தில் காணப்பட்ட தழும்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது தீக்காயமாக இருக்கலாம் எனவும் பச்சை குத்திக்கொண்டிருக்கலாம் எனவும் பலர் கருதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தழும்புகளுக்கு கப்பிங் என்ற மருத்துவ முறை தான் காரணம். இது காயங்களை குணப்படுத்தவும் வலிகளை போக்குவதற்கும் பயன்படும் மருத்துவ முறை ஆகும்.
ஆசியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பழங்காலத்திலிருந்தே இந்த சிகிச்சை முறையை மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். தற்போது சீனாவிலும் சில மேற்கு நாடுகளிலும் அதிகமாக வழக்கத்தில் இருக்கும் இந்த சிகிச்சையை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.