எந்த பிரச்சினைக்கும் துப்பாக்கி தீர்வு ஆகாது என்று கூறிய காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, அழகான பள்ளத்தாக்கை மற்றொரு சிரியாவாக மாற்றாதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பாக்க்ஷி மைதானத்தில் மாநில அரசு சார்பில் சிறப்பு விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் உரையாற்றிய மெகபூபா முப்தி மாநிலத்தில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் வன்முறைகளை கைவிடுமாறு இளைஞர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
மெகபூபா முப்தி பேசுகையில், ”மத்தியில் அமைந்த அரசுகள் பல ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரத்தை கையாளும் விதம் எனக்கும் கவலை அளிக்கிறது. காஷ்மீர் சார்ந்துள்ள இந்த பெரிய நாடு மதத்தை பார்க்காமல் ஒரு ஜனநாயகத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. அப்படியிருக்கையில் நமது ஜனநாயகம் ஏன் இன்னும் வாக்குகளிலேயே கட்டுண்டு கிடக்கிறது? ஜனநாயகத்தின் முக்கியமான அங்கமே பேச்சுவார்த்தை தான். இதன் மூலம் ஏராளமான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு கண்டுள்ளோம்.
ஆனால் இங்கே அந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல நாம் ஏன் தவறிவிட்டோம்? எங்கே தவறு நடந்தது? இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பேச்சுவார்த்தை மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தையை தவிர பிரச்சினைகளை தீர்க்கவும், கவலைகளை போக்கவும் எந்த வழியும் இல்லை. துப்பாக்கிகள் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. துப்பாக்கிகள் எந்த பிரச்சினையையும் தீர்த்து வைத்ததும் இல்லை. எந்த பிரச்சினைக்கும் துப்பாக்கி தீர்வு ஆகாது.
எனவே காஷ்மீரை பற்றி எரிய வைக்கும் நோக்கம் கொண்ட சுயநல சக்திகளின் கீழ் இளைஞர்கள் செல்ல வேண்டாம்.
அழகான பள்ளத்தாக்கை மற்றொரு சிரியாவாகவோ, ஆப்கானிஸ்தானாகவோ மாற்றாதீர்கள். எனக்கு சிறிது அவகாசம் தாருங்கள். அப்போதுதான் மாநிலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான திட்டப்படி என்னால் செயல்பட முடியும். காஷ்மீர் மக்கள் கெட்டவர்கள் இல்லை. அதைப்போலத்தான் இந்தியாவும். ஆனால் தேர்தல் விஷயத்தில் தான் எங்கேயோ தவறு நடந்துள்ளது. ஜவஹர்லால் நேரு முதல் இன்று வரை இந்த நாட்டை ஆண்ட தலைவர்களும், கட்சிகளுமே அந்த தவறை செய்திருக்கின்றன, என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.