கான்பெர்ரா,
2 ஆண்டுகளுக்கு முன் 239 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மலேசியா விமானம் எம்.எச் 370 மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் 8–ந் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அதில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விமானம், நடுவானில் மாயமானது.
அந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 135 மில்லியன் டாலர் (சுமார் ரூ.905 கோடி) செலவில் தேடும் பணி நடந்தும், அந்த விமானத்தைப்பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அந்த விமானத்தில் இருந்து பெறப்பட்ட சிக்னல்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த வல்லுனர்கள் ஆராய்ந்தார்கள்.
அதில் அந்த விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, அது நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி என்ற வேகத்தில் தொடங்கி அதிவேகமாக கடலில் விழுந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
விமானம் தற்போது தேடப்படும் பகுதியில்தான் கடலுக்குள் விழுந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணைய தலைமை ஆணையர் கிரேக் ஹூட் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.