Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 13, 2016

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...மீண்டும் நாட்டிற்காக களமிறங்கும் மெஸ்ஸி


உலககோப்பை தகுதி சுற்று போட்டிகளுக்கான அர்ஜென்டினா வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் மீண்டும் நாட்டிற்காக களமிறங்கி விளையாட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து அணித்தலைவராக இருந்து வந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டியில் சிலியிடம், அர்ஜென்டினா தோல்வியை தழுவியதை தொடர்ந்து உடனடியாக சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், உலககோப்பை தகுதி சுற்று போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளன. இதில் அர்ஜெண்டினா அணி, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இதற்கான வீரர்கள் பட்டியலில் 29 வயதான மெஸ்ஸியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து அர்ஜென்டினா மீடியா ஒன்றிற்கு  மெஸ்ஸி அளித்துள்ள பேட்டியில்

, அர்ஜென்டினா அணிக்காக தான் மீண்டும் விளையாட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நாட்டை மிகவும் நேசிப்பதாகவும், அதற்கு தன்னால் ஆன சேவையை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, தனக்குள் நிறைய கேள்விகள் எழுந்ததாகவும், ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மெஸ்ஸி கூறினார்.

ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணியில் சரிசெய்ய வேண்டியவை நிறைய உள்ளதாகவும், அவற்றை உள்ளிருந்து தான் செய்ய வேண்டும் என்றும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.