Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 11, 2016

ஈஷா யோகா மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி 4 மணி நேரம் விசாரணை


ஈஷா யோகா மையத்தில் மாவட்ட நீதிபதி பொங்கியப்பன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி ஆகியோர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

முதன்மை நீதிபதி 4 மணி நேரம் விசாரணை

ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி ஆகியோர் நேற்று மதியம் 3 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர். அவர்கள் அங்கு தங்கியுள்ள கீதா, லதா என்ற இரண்டு பெண்களிடமும், ரமேஷ் என்பவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

அவர்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

நிர்வாகிகள்

இந்த விசாரணை குறித்து ஈஷா யோகா மையம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆனந்த், ஏகா, தன்னார்வலர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை ஈஷா யோகா மையத்தில் நாங்கள் யாரையும் மூளைச்சலவை செய்யவில்லை. அவர் களின் விருப்பத்தின் பேரில் தான் அனைவரும் தங்கியுள்ளனர். இங்கு யாருக்கும் போதை மருந்தும் கொடுப்பதில்லை. மேலும் ஈஷா யோகா மையம் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் எதுவும் கட்டவில்லை. அனுமதி பெற்றுத்தான் கட்டிடங்கள கட்டப்பட்டுள்ளன. இங்கு தங்கி சன்னியாசம் பெற்றிருப்பவர்களுக்கு உடனடியாக சன்னியாசம் அளிப்பதில்லை. அவர்கள் விண்ணப்பித்து அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தான் சன்னியாசம் அளிக்கப்படுகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பெண்கள் பேட்டி

கோவை ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள லதா, கீதா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். நாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறோம். கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி ஈஷா யோகா மையத்தில் எங்கள் பெற்றோர் எங்களுடன் தங்கியிருந்தனர். ஆனால் அதன்பிறகு அவர் களை யாரோ தூண்டி விட்டு எங்கள் மீது புகார் கூறியுள்ளனர். நாங்கள் எங்கள் விருப்பத்தின் பேரில் தான் இங்கு தங்கியுள்ளோம். யாரும் எங்களை கட்டாயப்படுத்தவில்லை. எங்களிடம் நடந்த விசாரணையில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறோம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.