Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 24, 2016

உலகில் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்


புதுடெல்லி,

உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.

நியூவ் வேல்டு வெல்த் என்ற அமைப்பு இந்த கணக்கெடுப்பை நடத்தி வெளியிட்டது. இதன்படி, உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த தனிநபர் மதிப்பு 48,900 பில்லியன் டாலராக உள்ளது. பட்டியலில் 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ஜப்பானும், 17,400 பில்லியன் டாலர் , 15,100 பில்லியன் டாலர் மதிப்பை முறையே பெற்றுள்ளன.

4-வது இடத்தை இங்கிலாந்து பெற்றுள்ளது. இதன் மதிப்பு 9,200 பில்லியன் ஆகும். இதைத்தொடர்ந்து 5-வது இடத்தில் ஜெர்மனி உள்ளது. பிரான்சு 6-வது இடத்தில் உள்ளது. இந்தியா 5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் கனடா 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா, இத்தாலி முறையே 9-வது மற்றும் 10 வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களின் சொத்து மதிப்பில் ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதன் காரணமாக பண மதிப்பு மிகையாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.