Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 13, 2016

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி 285 ரன்கள் முன்னிலை


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 4-வது நாளில் வெஸ்ட் இண்டீஸ் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசத்தல் பந்து வீச்சு காரணமாக அந்த அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புவனேஷ் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் 26 ரன்களிலும், ராகுல் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்களில் வெளியேறினார்.

இந்திய அணி 4- ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 51 ரன்களிலும் ரோகித் சர்மா 41 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட 285 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பெரும்பாலும் இந்த டெஸ்ட் டிராவில் முடியும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.