Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 13, 2016

நான் கிரிக்கெட் விளையாடுகின்றேன், தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புகின்றேன், மகேந்திர சிங் டோனி


ஓய்வு தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் மகேந்திர சிங் டோனி, “நான் கிரிக்கெட் விளையாடுகின்றேன், தொடர்ந்து அதில் கவனம் செலுத்த விரும்புகின்றேன்,” என்று கூறிஉள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வெற்றிகள் மற்றும் சாதனைகள் படைத்த கேப்டன் டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் டோனியின் சொல்லப்படாத கதை (Ms Dhoni:The untold story) படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய கேப்டன் டோனி, ஓய்வு தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “நான் கிரிக்கெட் விளையாடுகின்றேன், தொடர்ந்து அதில் கவனம் செலுத்த விரும்புகின்றேன்,” என்று கூறி உள்ளார்.

உங்களுடைய அடுத்த நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய டோனி, “பதில் அளிப்பதற்கு இது மிகவும் கடினமான கேள்வி... நான் வளரும்போது, என்னுடைய வாழ்க்கையில் எனக்கு இரு நிலைபாடே இருந்தது, ஒன்று கிரிக்கெட் விளையாடுவது ஒன்று படிப்பது. எனக்கு எப்போது வேலை கிடைத்ததோ, அப்போது கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் கையில் வேலை உள்ளது என்ற பாதுகாப்பு இருந்தது. நான் நேர்மறை மற்றும் எதிர்மறை பக்கத்தை பார்க்கவேண்டும், மக்கள் என்னை எப்படி பார்க்கின்றனர் என்பதை எண்ணி முடிவெடுக்கவேண்டும். அடுத்த நடவடிக்கை குறித்து இனிதான் பார்க்கவேண்டும், நான் கிரிக்கெட் விளையாடுகின்றேன், அதில் கவனம் செலுத்த விரும்புகின்றேன்.

நிகழ்கால வாழ்க்கையின் மீது நம்பிக்கை உள்ளது என்று கூறிஉள்ள டோனி கடந்த காலம் மற்றும் வருங்காலம் குறித்து அதிகமாக நினைப்பது கிடையாது என்று கூறி உள்ளார்.

“என்னுடைய கடந்த காலத்தில் இருந்து நான் பாடம் கற்று உள்ளேன், வருங்காலத்தில் அடையவேண்டும் என்ற ஒரு இலக்கு எல்லோருக்கும் இருக்கும். ஆனால் நிகழ்காலம் என்பது முக்கியமானது. உங்களுடைய குடும்பம் அல்லது நண்பர்கள் அல்லது பொதுமக்களிடம் இருந்து உங்களுக்கு ஊக்குவிப்பு கிடைக்கும். எனக்கு என்னுடைய நாடே மிகப்பெரிய ஊக்குவிப்பு காரணி,” என்று டோனி கூறிஉள்ளார். ”இது என்னுடைய “மைல்கல்” என்று நினைத்து நான் கிரிக்கெட் விளையாடியது கிடையாது. பள்ளி அல்லது பூங்காவில் கிரிக்கெட் விளையாடும் போதும் வெற்றி ஒன்றே என்னுடைய குறிக்கோள். எதிர்காலம் என்ன என்பதை தீர்வு செய்ய ’மைல்கல்’லை பயன்படுத்த முடியாது,” என்று கூறிஉள்ளார்.

”அப்படியெனில் மைக்கேல் பெல்ப்ஸ் 5 ஒலிம்பிக் தங்கம் வென்ற பிறகு ஓய்வு பெற்றிருக்கலாமே. இது ஒருவர் எந்தளவுக்கு தங்கள் பணியை தொடர முடியும் என்பது பற்றியது. ஒருவர் எடுக்கும் முடிவானது எவ்வளவு நன்றாக செயல்படுகிறோம், இதனை எந்த அளவுக்கு மேலும் எடுத்து செல்ல முடியும் என்பதைப் பொறுத்ததாகும்,” என்று விரிவாக டோனி விளக்கம் அளித்து உள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.