தெலுங்கானா துணை முதல்-மந்திரி வெளிநாட்டு பயிற்சியாளர் கருத்து குறித்து கோபிசந்த் மற்றும் பிவி சிந்து பதில்அளித்து உள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் 22-ம் தேதி ஐதராபாத் திரும்பினார்கள். அவர்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மாலையில் சிந்துவிற்கும், கோபிசந்திற்கும் பரிசு வழங்கப்பட்டது.
ஐதராபாத்தில்சிந்துவை வரவேற்க வந்திருந்த தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முகமது அலி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”நாங்கள் சிந்துவிற்கு சரியான பயிற்சியை கொடுக்க விரும்புகிறோம். நாங்கள் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க திட்டமிட்டு உள்ளோம், பயிற்சியின் காரணமாக அவர் தங்கம் வெல்ல முடியும்,” என்று கூறினார்.
முகமது அலியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை எழுப்பியது. கோபிசந்த் இந்தியாவிற்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வாங்கி தந்த பயிற்சியாளர் ஆவார். கோபிசந்திடம் பயிற்சி பெற்ற சாய்னா நெக்வால் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். இந்நிலையில் தெலுங்கானா துணை முதல்-மந்திரியின் இப்பேச்சு பெரும் சர்ச்சையாகியது. இவ்வாறு பேசிய முகமது அலியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
கோபிசந்த், பிவி சிந்து பதில்
இந்நிலையில் தெலுங்கானா துணை முதல்-மந்திரி முகமது அலியின் சரியான பயிற்சியாளர் கருத்து தொடர்பாக பிவி சிந்து பேசுகையில், ”எனக்கு கோபி சார் தான் நல்ல பயிற்சியாளர், வேறு எதுவும் சொல்வதற்கு நான் விரும்பவில்லை,” என்று கூறிவிட்டார். கரோலின் மரின் உண்மையாகவே சிறப்பாக ஆடினார், அது அவருடைய நாள். அடுத்த மாதம் நடைபெற உள்ள சூப்பர் சிரியஸ் போட்டிக்கு தயாராகி வருகின்றேன், என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று சிந்து மகிழ்ச்சி பொங்க கூறிஉள்ளார்.
தெலுங்கானா துணை முதல்-மந்திரி முகமது அலியின் சரியான பயிற்சியாளர் கருத்து தொடர்பாக கோபிசந்த் பேசுகையில், ’அவர் தெரியாமல் கூறியிருக்கலாம், சாதகமான விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கின்றேன்,” என்று கூறிஉள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.