போலீசாரின் புலன்விசாரணையில் உள்ள குறைபாடுகளினால் உண்மை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர் என்றும், இதுபோன்ற குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க முடியவில்லையே என்ற மனவேதனைபடுகிறோம் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
காவலாளிகள் கொலை
தர்மபுரி மாவட்டம், ராயக்கோட்டை மெயின் ரோட்டில், ஸ்ரீதேவி ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் செயல்படாமல் இருந்ததால், ஊழியர்கள் அங்கு வருவதில்லை. அந்த மில்லில் நடராஜ், ராமன் ஆகியோர் காவலாளிகளாக வேலை செய்தனர்.
கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி நடுஇரவில், இந்த இரு காவலர்களை மர்மநபர்கள் சிலர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள அலுமினியம் மற்றும் செம்பு மின் கம்பிகளை கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், வெள்ளக்கவுண்டபாளையம் கிராம நிர்வாக அதிகாரியிடம், கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி சிவராஜ், சக்திவேல், பெரியசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் சரணடைந்து, காவலாளிகள் இருவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
ஆயுள் தண்டனை
இதையடுத்து தர்மபுரி இன்ஸ்பெக்டர், அந்த 4 பேரையும் கைது செய்தார். பின்னர் வேல்முருகன், பழனி ஆகியோரையும் கைது செய்தார். இந்த வழக்கு தர்மபுரி செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, வேல்முருகன் இறந்துவிட்டார்.
இதையடுத்து சிவராஜ், சக்திவேல், பெரியசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பழனியை வழக்கில் இருந்து விடுதலை செய்தும், கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
நிரூபிக்கவில்லை
இந்த வழக்கு முழுவதும் சந்தர்ப்ப சாட்சிகளை கொண்டதாக உள்ளன. ஸ்பின்னிங் மில்லுக்குள் இருந்த 2 டிரான்ஸ்பார்மர்களில் இருந்து குற்றவாளிகள் அலுமினியம், செம்பு கம்பிகளை கொள்ளை அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து 265 கிலோ அலுமினியம் மற்றும் செம்பு மின் கம்பிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால், ஒரு டிரான்ஸ்பார்மில் 125 கிலோ மின்கம்பிதான் இருக்கும். 2 டிரான்ஸ்பார்மர்களில் மொத்தம் 250 கிலோ மின்கம்பிதான் இருக்கவேண்டும். கொள்ளையர்கள் பாதி மின் கம்பிகளைத்தான் கொள்ளை அடித்துள்ளனர். ஆனால், 265 கிலோ செம்பு மற்றும் அலுமினியம் கம்பிகளை பறிமுதல் செய்துள்ளதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். இது ஏற்கும்விதமாக இல்லை. மேலும், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட கம்பிகளும், மில்லில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின்கம்பிகளும் ஒன்றுதான் என்பதை அறிவியல் பூர்வமாக போலீசார் நிரூபிக்கவில்லை.
தண்டனை வழங்க முடியாது
மேலும், கிராம நிர்வாக அதிகாரியை குற்றவாளிகளுக்கு தெரியாது என்றும் அவரை நம்பி சரணடைந்து ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்தனர் என்றும் போலீசார் கூறுவது நம்பும்படியாக இல்லை. அதிலும், 4-வது குற்றவாளி பெரியசாமிதான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மற்றவர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்று மனுதாரர்கள் வக்கீல்கள் வாதிட்டார்கள்.
இந்திய சாட்சிகள் சட்டத்தின்படி, சக குற்றவாளி நீதிபதி அல்லாத பிற அரசு அதிகாரிகளிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாது. எனவே, மனுதாரர்கள் 4 பேர் மீதும் போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சந்தர்ப்ப சாட்சிகளும், குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.
நீதிபதிகளுக்கு வேதனை
அதேநேரம், இந்த வழக்கில் விலை மதிக்கமுடியாத 2 உயிர்கள் பலியாகியுள்ளது. இந்த கொடூர கொலைகள் சட்டப்படி நிரூபிக்காததால், குற்றவாளிகளுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்ய முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
போலீசாரின் புலன் விசாரணையில் உள்ள குறைபாடுகள்தான் இதற்கு காரணமாகும். இந்த காரணத்தினால், பல வழக்குகளில், குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். குறிப்பாக பணம் படைத்த திமிங்கலங்கள் சட்டம் என்ற வலையில் இருந்து தப்பித்து விடுகின்றன.
நீதிபதிகளாகிய நாங்கள் சட்டத்தின் அடிப்படையில்தான் ஒருவருக்கு தண்டனை வழங்க முடியும். மன்னர்களை போல தண்டனை வழங்க முடியாது. சாட்சிகள், சாட்சி ஆவணங்கள் இல்லாததால், உண்மையான குற்றவாளிகளை தப்பிவிடுகின்றனர். அப்படி தப்பும் உண்மை குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லையே என்ற வேதனை எங்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
இழப்பீடு வழங்கவேண்டும்
இந்த வழக்கில் அப்பாவி இரு உயிர்கள் பலியாகி உள்ளன. இறந்தவர்கள் கூலித் தொழிலாளிகள். அவர்களை நம்பித்தான் அவர்களது குடும்பங்களே உள்ளன. எனவே, கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.
அதாவது தமிழ்நாடு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கொலை செய்யப்பட்ட நடராஜ், ராமன் ஆகியோரது குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம், ரூ.4 லட்சத்தை தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 4 வாரத்துக்குள் வழங்கவேண்டும். மனுதாரர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.