புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் கிரண்பேடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:–
டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசியது ஆக்கப்பூர்வமாக இருந்தது. மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களுக்காக போதிய நிதியை ஒதுக்கி உள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை சரிவர எந்த திட்டங்களுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து புதுச்சேரி முதல்–அமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். புதுச்சேரிக்கு தற்போது தொழில்துறையில் வளர்ச்சி தேவைப்படுகிறது. அதில் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். புதுச்சேரியை தொழில் நகரமாக உருவாக்குவதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டப்படும்.
புதுச்சேரியில் சுகாதார துறையில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு நல்லெண்ண தூதராக அழைப்பு விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஜினியின் குடும்பத்தினருடன் பேசி வருகிறோம். ரஜினி தூதராக வரும் பட்சத்தில் புதுச்சேரியில் சுகாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.