ஒரு பவுன் தங்கத்தின் விலை 25 ஆயிரத்து 600 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளதால், தங்கத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
28.3 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்றைய (நேற்று முன்தினம்) நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து ஒரு ரூபாயாகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை 24 ஆயிரத்து 8 ரூபாயாகவும் இருந்தது. அடுத்த சில நாட்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும் பவுன் தங்கத்தின் விலை 25 ஆயிரத்து 600 ரூபாயாகவும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக சந்தை வல்லுனர்கள் கணித்திருக்கின்றனர்.
அடுத்த சில நாட்களில் ஆடி மாதம் முடிந்து திருமண சீசன் தொடங்க இருக்கும் நிலையில், தங்கத்தின் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே நாளில் சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 344 ரூபாயாகவும், ஒரு பவுன் தங்கத்தின் விலை 18 ஆயிரத்து 752 ரூபாயாகவும் இருந்தது. கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை கிராமுக்கு 657 ரூபாயும், பவுனுக்கு 5 ஆயிரத்து 256 ரூபாயும் அதிகரித்திருக்கிறது. ஓராண்டில் தங்கத்தின் விலை 28.3 சதவீதம் அதிகரித்திருப்பது சமாளிக்க முடியாததாகும்.
மத்திய அரசின் கடமை
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து அறிவித்த பிறகு முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலை தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் ஆகும். அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்கம் விலை அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை என்று சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில் தங்கம் விலையை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். மத்திய அரசு நினைத்தால் தங்கத்தின் விலையை பெருமளவில் குறைக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.