சென்னையில் சிதம்பரனார், ராயபுரம், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், திருவொற்றியூர், ஆவடி, ஆர்.கே.நகர், தியாகராயநகர், மயிலாப்பூர், பரங்கிமலை, தாம்பரம், சைதாப்பேட்டை, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய 17 மையங்களில் மாதாந்திர பொது வினியோகத்திட்ட குறைதீர் கூட்ட முகாம் நாளை (13–ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த பகுதிகளில் சுற்றி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது வினியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள், பொருட்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவைகள், வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது, குறைகள் இருப்பது குறித்தும் இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட தகவல் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.