ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பெற்ற தீபா கர்மாகர் மயிரிழையில் வெண்கலத்தை நழுவவிட்டார்.
பதக்கம் கிடைத்து இருந்தால் இதை விட சிறப்பாக இருந்து இருக்கும், வருத்தம் எதுவும் கிடையாது என்று கூறிஉள்ளார்.
ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்சில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார். அவர் பங்கேற்ற வால்ட் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்தது. இதில் தீபா கர்மாகர் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 15.066 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். 0.15 புள்ளிகளில் அவர் பதக்க வாய்ப்பை இழந்தார். அமெரிக்காவை சேர்ந்த ஹிமோன் பைல்ஸ் தங்கப் பதக்கமும் (15.966 புள்ளிகள்), ரஷிய வீராங்கனை மரியா பசேகா வெள்ளியும் (15.253), சுவிட்சர்லாந்தை சேர்ந்த கியூலியா வெண்கலமும் (15.216) பெற்றனர்.

தீபா கர்மாகர் பதக்கம் வெல்லா விட்டாலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்தியர்களின் உள்ளங்களை கவர்ந்தார். சிறிய தொழில் நுட்ப தவறுகளால் அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போனது. இதற்கு பயிற்சியாளரின் அணுகுமுறையே காரணம். இளம் வீராங்கனையான அவருக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வைத்து இருந்ததால் இதைவிட அவர் முன்னேற்றம் கண்டு இருப்பார்.
ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் வால்ட் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது குறித்து தீபா கர்மாகர் பேசுகையில்,
நான் 15.016 புள்ளிகள் பெற்றுள்ளேன். இது எனது மிகப் பெரிய ஸ்கோராகும். இதனால் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். பதக்கம் கிடைத்து இருந்தால் இதை விட சிறப்பாக இருந்து இருக்கும். எனது செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் இதுவாகும். மற்ற வீராங்கனைகள் அனுபவம் பெற்றவர்கள். எனவே எனக்கு வருத்தம் இல்லை. அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு (2020) ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்காகும், என்று கூறிஉள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர் 6 வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை தொடங்கினார். ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்திற்கு பொதுவாக கால் பாதம் உள்பக்கம் வளைந்து கூர்மையாக இருக்க வேண்டும். ஆனால் தட்டையான கால்பாதங்களை பெற்றிருந்த இவர் ஜிம்னாஸ்டிக்சில் ஜொலிக்க முடியாது என்று விமர்சித்தனர். ஆனால் தொடர்ந்து கடினமான பயிற்சிகளின் மூலம் கால்அமைப்பில் உள்ள பிரச்சினைகளை சமாளித்து விட்டார். தனது அறிமுக ஒலிம்பிக்கிலேயே அமர்க்களப்படுத்தி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.