ரியோ டி ஜெனீரோ,
ரியோ ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.
ஒலிம்பிக் போட்டி
உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020–ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.
ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில் இருந்தே பதக்க வேட்டையாடிய அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே பதக்கப்பட்டியலில் ‘செஞ்சுரி’ அடித்து முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த நாடு 43 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என்று மொத்தம் 118 பதக்கத்துடன் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை எட்டியது. நீச்சல், தடகளம் அமெரிக்காவின் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு உதவிகரமாக இருந்தது. நீச்சலில் 16 தங்கம் உள்பட 33 பதக்கமும், தடகளத்தில் 13 தங்கம் உள்பட 31 தங்கமும் அமெரிக்கா அள்ளியது. ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடிப்பது இது 17–வது முறையாகும்.
இந்த முறை சீனாவை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து 27 தங்கம், 22 வெள்ளி, 17 வெண்கலம் என்று 66 பதக்கத்துடன் இங்கிலாந்து 2–வது இடத்தை பிடித்தது. 1908–ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இங்கிலாந்து முதலிடத்தை பெற்றிருந்தது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் இங்கிலாந்தின் சிறந்த செயல்பாடாக இது அமைந்துள்ளது. சீனா 26 தங்கம் உள்பட 70 தங்கத்துடன் 3–வது இடத்தை பெற்றது.
உசேன் போல்ட் – பெல்ப்ஸ்
*குறுகிய நேர நேரத்தில் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்டின் மின்னல் வேக ஓட்டத்தை காண கோடிக் கண்கள் போதாது. இந்த முறையும் அனைவரையும் வசியப்படுத்தியதில் இந்த அசுர வேக ஓட்டத்துக்கு முக்கிய பங்கு உண்டு. 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4 x100 மீட்டர் தொடர் ஓட்டம் மூன்றிலும் தொடர்ந்து மூன்றாவதாக முறையாக தங்கம் வென்று புதிய சகாப்தம் படைத்த மனநிறைவோடு ஒலிம்பிக்கில் இருந்து விடைபெற்றார்.
*ஓய்வை முடிவை கைவிட்டு மறுபடியும் நீச்சல் குளத்தில் பாய்ந்த அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், ரியோ ஒலிம்பிக்கின் மற்றொரு கதாநாயகன் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஒலிம்பிக்கில் 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை மகசூல் செய்த மைக்கேல் பெல்ப்ஸ், ஒட்டுமொத்தத்தில் தனது ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையை 23 தங்கம் உள்பட 28 ஆக உயர்த்தினார். யாரும் எட்ட முடியாத உச்சத்திற்கு சென்று விட்ட மைக்கேல் பெல்ப்சும், இத்துடன் நீச்சலுக்கு முழுக்கு போட்டார்.
லெடெக்கி
*நீச்சலில் சில வீராங்கனைகள் புதிய நட்சத்திரங்களாக முத்திரை பதித்தார்கள். அந்த வகையில் ‘இரும்பு பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ, தனிநபர் பிரிவில் 3 தங்கமும், ஒரு வெண்கலமும் வென்று வியப்பூட்டினார். இதே போல் பிரீஸ்டைல் நீச்சலில் ‘அல்லிராணி’ யாக வலம் வந்த அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி 400 மீட்டர் பிரீஸ்டைல், 800 மீட்டர் பிரீஸ்டைலில் உலக சாதனை படைத்ததுடன் மொத்தம் 4 தங்கமும், ஒரு வெள்ளியும் குவித்தார்.
*‘எப்படி வேண்டுமானாலும் பல்டி அடிப்பேன், எந்த கோணத்திலும் உடலை வில்லாக வளைப்பேன்’ என்று சொல்லும் அளவுக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் சூறாவளி 19 வயதான சிமோன் பைல்ஸ், புல்லரிக்க வைத்தார். 4 தங்கம், ஒரு வெண்கலத்தை கைப்பற்றிய அவருக்கு நிறைவு விழாவில் அமெரிக்காவின் தேசிய கொடியை ஏந்தி சென்றார்.
பேட்மிண்டன் தாரகை
*டென்னிசில் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றோடு நடையை கட்டினார். நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சமு கால்இறுதிக்கு முன்பாகவே மண்ணை கவ்வினார். அதிக பிரபலமில்லாத புயர்ட்டோரிக்கோவின் மோனிகா புய்க், தங்கள் நாட்டிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார். ஆண்கள் பிரிவில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே மீண்டும் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
*பேட்மிண்டனில் சீனாவின் ஆதிக்கப்பிடி இந்த முறை வெகுவாக தளர்ந்தது. பெண்கள் ஒற்றையரில் நம்பர் ஒன் வீராங்கனை ஸ்பெயினின் கரோலினா மரின் வெற்றி பெற்று, ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் ஐரோப்பிய சாம்பியன் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தினார்.
*65 ஒலிம்பிக் சாதனைகளும், 19 உலக சாதனைகளும் பதிவாகின.
*இது தவிர சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷிய தடகள அணிக்கு தடை விதிக்கப்பட்டது. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் கடைசி நேரத்தில் களம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. தங்களிடம் கொள்ளை போனதாக பொய்யாக நாடகம் ஆடிய அமெரிக்க நீச்சல் வீரர்கள் ஜேக் காங்கேர், கன்னார் பென்ட்ஸ், ரியான் லோக்டே, ஜிம்மி பெய்கென் ஆகியோர் மன்னிப்பு கேட்ட பின்னரே அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.
--–
இந்தியாவுக்கு 2 பதக்கம் தான்!
இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்குக்கு அனுப்பப்பட்டனர். ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும். முதல் 11 நாட்களில் சோகமே மிஞ்சிய நிலையில் கடைசியில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலமும், பேட்மிண்டன் ‘புயல்‘ பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி மானத்தை காப்பாற்றினர்.
ஒலிம்பிக் வரலாற்றில் குறைந்த வயதில் மற்றும் பெண்களில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய பி.வி.சிந்துவின் காட்டில் இப்போது பரிசுமழை கொட்டி கொண்டிருக்கிறது. ஒலிம்பிக்கில் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக கடந்த 3 மாதங்களாக செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து தியாகம் செய்ததாக நெகிழ்ச்சியுடன் சிந்து கூறியுள்ளார். மல்யுத்ததில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாக்ஷி மாலிக்குக்கு நிறைவு விழாவில் நமது தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் வழங்கப்பட்டது.
2012–ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6 பதக்கம் கிடைத்தது. அதனால் இந்த முறை பதக்க எண்ணிக்கையில் இரட்டை இலக்கை அடைவோம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறி வந்தது. எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கி சுடுதலில் விழுந்த அடி பெரும் பின்னடைவாக அமைந்து விட்டது. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகரும், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவும் 4–வது இடத்தை பிடித்து மயிரிழையில் பதக்கத்தை நழுவ விட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.