குவாண்டம் போட்டான் துகள்களை எளிதில் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்பதால் செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கு இதனை பயன்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. அதன்படி, சீனாவின் விண்வெளி அமைப்பு உலகின் முதல் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை உருவாக்கியது.
இந்த செயற்கைக்கோள் கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் 600-கிலோவிற்கும் அதிகமான எடை கொண்டது. இது 90 நிமிடத்திற்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும்.
இந்த புதிய செயற்கைக்கோளின் உதவியுடன் பீஜிங் மற்றும் உரும்கி ஆகிய இரு நகரங்களுக்கு இடையே பாதுகாப்பான குவாண்டம் தகவல் தொடர்புகளை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தகவல் தொழில்நுட்பத்தி


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.