Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

கம்பி கூண்டுகளுக்கு பதிலாக கோழிகளை அடைக்க மாற்று வழிகளை யோசியுங்கள் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்


புதுடெல்லி,

பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை அடைக்க பெரும்பாலும் கம்பி கூண்டுகளே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அடைக்கப்படும் கோழிகள் நகர முடியாமலும், சிறகை விரிக்க முடியாமலும் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றன. இந்த கொடூரத்தை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முட்டையிடும் கோழிகளுக்கு பண்ணைகளில் நேரும் கொடூரம் குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். பின்னர் அவர்கள், கோழிகளை அடைக்க கம்பி கூண்டுகளுக்கு பதிலாக மாற்று வழிகளை சம்பந்தப்பட்ட துறையினருடன் அடுத்த மாதம் (செப்டம்பர்) கலந்து ஆலோசிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர்சிங், இது தொடர்பான சட்டங்களை பரிசீலிப்பதாகவும், இதற்கு சில காலம் பிடிக்கும் எனவும் கூறினார்.

பின்னர், விலங்குகள் நலவாரியம், பிராணிகள் நல ஆர்வலர்கள், பண்ணை முதலாளிகள் உள்ளிட்ட ஆர்வலர்களும் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இந்த பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.