Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 13, 2016

ஐ.எஸ்.அமைப்பு உருவாக ஹிலாரி, ஒபாமா காரணம் என்று கூறிய விவகாரம்:கேலிக்காக கூறியதாக டொனால்டு டிரம்ப் விளக்கம்


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பும் களத்தில் உள்ளனர்.டொனால்டு டிரம்ப் எப்போதும் அதிரடியான கருத்துக்களை கூறி தன்னைச்சுற்றி சர்ச்சை வளையத்தை உருவாக்கி  இருக்கிறார். இதனால் ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறபடுகிறது

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் அதிபர் ஒபாமாவும்,ஹிலாரி கிளிண்டனும் தான் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தோன்ற காரணம் என்று பேசியிருந்தார்.  இந்த விமர்சனம் கடும் சலசலப்பை அந்நாட்டில் ஏற்படுத்தியது. வெள்ளை மாளிகை இது பற்றி எந்த எதிர்வினையும் காட்டவில்லை. இந்த நிலையில்,  தனது கருத்தில் இருந்து  திடீர் பல்டி அடித்துள்ள டிரம்ப், தான் கேலியாக அவ்வாறு கூறியதாகவும் ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.