Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நார்சிங் யாதவுக்கு மீண்டும் சிக்கல்


ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் நார்சிங் யாதவுக்கு கடந்த ஜூன் மாதம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியால் (நாடா) நடத்தப்பட்ட பரிசோதனையில் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. ‘தான் ஊக்க மருந்து எதனையும் பயன்படுத்தவில்லை. தனது எதிரிகள் உணவில் ஊக்க மருந்தை கலந்து சதி செய்து இருக்கலாம்’ என்று நார்சிங் யாதவ் மறுத்தார். இது குறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து நார்சிங் யாதவ் பிரேசிலுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது தொடக்க சுற்று பந்தயம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில் நாடாவின் அனுமதி முடிவை எதிர்த்து உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் (வாடா) சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்து இருக்கிறது. இந்த அப்பீல் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவை பொறுத்தே நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியுமா? என்பது தெரியவரும். வாடாவின் வாதத்தை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டால் நார்சிங் யாதவுக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.