August 21, 2016
திருவண்ணாமலையில் மின்சாரம் திருடியவருக்கு ரூ.92,000 அபராதம்!
திருவண்ணாமலை மாவட்டம் பனையூர் கிராமத்தில் மின்சாரத்தை முறைகேடாக திருடியவருக்கு 92 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆரணி அடுத்த பனையூர் ஊராட்சியின் தலைவராக இருப்பவர் கலைமணி. ஆலோ பிரிக்ஸ் கல் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். கலைமணியின் மைத்துனர் கன்னியப்பன் இந்த பணிகளை கவனித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஆலோபிரிக்ஸ் கல் உற்பத்தி செய்யும் இயந்திரங்களுக்கு தேவையான மின்சாரத்தை முறைகேடாக எடுத்து பயன்படுத்துவதாக முன்னாள் ராணுவத்தினர் மின் திருட்டு தடுப்புக் குழுவினருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து கன்னியப்பனுக்கு 92 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும் மின் திருட்டில் ஊராட்சி தலைவர் கலைமணி ஈடுபட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர், ஆரணி பாமக ஒன்றிய கழக செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மின்சாரம் திருடியவருக்கு ரூ.92,000 அபராதம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.