Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

கலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்…!!



கலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்…!!
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில் அதிகரித்துவரும் காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மத்திய கலிபோர்னியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள மலையோர காட்டுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ, மெல்ல, மெல்ல பரவி 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அழித்து நாசப்படுத்தியுள்ளது. இதுதவிர சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம் தீய்ந்தும், கருகியும் காணப்படுகிறது.
இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 700-க்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதும், காற்றின் போக்குக்கு ஏற்ப கட்டுக்கடங்காமல் படுவேகமாக பரவிவரும் இந்த தீயானது, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரைட்வுட் குடியிருப்பு பகுதியில் உள்ள பல வீடுகளை நாசப்படுத்தியது.
இதன்விளைவாக, அப்பகுதியில் வசித்துவந்த சுமார் 82 ஆயிரம்பேர் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், வடக்கு கலிபோர்னியாவின் ஒருசில பகுதிகளிலும் காட்டுத்தீ படுவேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, மத்திய கலிபோர்னியா மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. California beautiful and cool city. Pray fr the recovery

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.