Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 7, 2016

சென்னை தாம்பரத்தில் அரசு மருத்துவர் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளை



சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் பெண் மருத்துவர் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து 80 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சாரதா நேற்று வீட்டைப் பூட்டி விட்டுப் படப்பையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். இரவு வீடுதிரும்பிய அவர் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் சிட்லபாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.