August 29, 2016
8 லட்சம் ரூபாய்க்கு சேலைகள் வாங்கி கொண்டு அரசு செலவில் சேர்ப்பதாக ஸ்மிரிதி இரானி மீது புகார்
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இரானி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை வாங்கி கொண்டு அதற்கான தொகையை துறைரீதியான செலவுகளில் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்மிதி இரானி தற்போது ஜவுளித்துறையை கவனித்து வருகிறார்.
அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டதிலிருந்து அத்துறையின் செயலாளராக உள்ள ரேஷ்மி வர்மாவுடன் அவர் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஜவுளித்துறைக்கு கீழ் இயங்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஸ்மிதி இரானி, சில லட்சம் ரூபாய் மிதிப்புள்ள சேலைகளையும், விநாயகர் சிலை ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இதற்கான பணத்தை கொடுக்காமல், ஜவுளித்துறையின் கணக்கில் இதனை சேர்க்கும்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்த துறை செயலாளர் ரேஷ்மி, சொந்த செலவுகளுக்கு அரசு பணம் வழங்க முடியாது எனக் கூறி பணம் வழங்க மறுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பிதரமர் அலுவலகத்திலும் ரேஷ்மி புகார் அளித்தாகவும் கூறப்படுகிறது. இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள ஸ்மிதி, இதனை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனக்கு நெருங்கியவர்கள் மூலமாக ரேஷ்மியின் குற்றச்சாட்டு அடங்கிய கோப்புகளை அப்புறப்படுத்தவும் ஸ்மிதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
8 லட்சம் ரூபாய்க்கு சேலைகள் வாங்கி கொண்டு அரசு செலவில் சேர்ப்பதாக ஸ்மிரிதி இரானி மீது புகார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.