Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 24, 2016

70 வயது பிச்சைக்காரரை அசிங்கமாக பேசி அடித்துக் காயப்படுத்திய அதிமுக பிரமுகர்!



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரபல அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு பிச்சை எடுத்துப் பிழைத்து வரும் 70 வயது முதியவரை அசிங்கமாகப் பேசியதோடு அடித்தும் காயப்படுத்தியுள்ளார் ஒரு அதிமுக பிரமுகர். இவர் இந்தக் கோவிலில் முன்பு அறங்காவலாரக இருந்துள்ளார்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு 50 பிச்சைக்காரர்கள் உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காசை வைத்துத்தான் அன்றாட ஜீவனம் செய்து வருகின்றனர். பலர் வயதானவர்கள்.
அங்கு தண்டபாணி என்ற 70 வயது முதியவரும் பிச்சை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்தக் கோவிலின் முன்னாள் அறங்காவலரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான நடராஜன் என்பவர் அங்கு வந்து தண்டபாணியை இங்கு வந்து பிச்சை எடுக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார். அசிங்கமாகவும் பேசி அடித்துள்ளார். இதில் தண்டபாணிக்கு காயம் ஏற்பட்டது.

அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் நடராஜனை கைது செய்தனர்.
வயதான பிச்சைக்காரரைப் போய் அடிக்கும் புத்தி என்ன புத்தியோ!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.