August 21, 2016
தாயை கற்பழிக்க முயன்றவனை குத்திக்கொன்ற 6 வயது சிறுவன்…!!
தென்ஆப்பிரிக்காவில் தாயை கற்பழிக்க முயன்றவனை குத்திக்கொன்ற 6 வயது சிறுவன்…!!
தென்ஆப்பிரிக்காவில் வடக்கு கேப் பகுதியைச் சேர்ந்தவர் செகோமோட்சோ கேர்சேவ். இவர் தனது 6 வயது மகன் குட்ல்வானோ கேர்சேப் அவனது அண்ணன் தபிசோ (8) ஆகியோரை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
வழியில் ஒரு மர்ம நபர் திடீரென குறுக்கிட்டான். அவன் திடீரென செகோ மோட்சோவின் தோற்பட்டையை தொட்டான். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திரும்பி பார்த்து என்ன என்று கேட்டார்.
உடனே அவன் அவரிடம் பணம் கேட்டான். அவர் மர மறுக்கவே, ஆத்திரமும், கோபமும் அடைந்த அவன் செகோமோட்சோவை தாக்கி கீழே தள்ளினான். அதைப் பார்த்த மகன்கள் குட் லவானோ மற்றும் தபிசோ ஆகியோர் காப்பாற்ற முயன்றனர்.
இதற்கிடையே அந்த மர்ம நபர் செகோமோட் சோவை கற்பழிக்க முயன்றான். அவனிடம் இருந்து தப்ப அவர் போராடினார்.
இதைப் பார்த்த 6 வயது குட்லவானோ கேர்சேப் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து தாயை கற்பழிக்க முயன்றவனை சரமாரி குத்தினான். இதனால் படுகாயம் அடைந்த அவன் அதே இடத்தில் இறந்தான்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது என்னை காப்பாற்றவே எனது மகன் காமுகனை கொன்றான் என செகோமோட்சோ தெரிவித்தார்.
தாயை கற்பழிக்க முயன்றவனை குத்திக்கொன்ற 6 வயது சிறுவன்…!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.