Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த மகாராஷ்டிரா டாக்டர் கைது... அதிர்ச்சி தகவல்கள்



6 பேரை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த மகாராஷ்டிரா டாக்டர் கைது... அதிர்ச்சி தகவல்கள்
சதரா: மகாராஷ்டிராவில் 6 பேரை கடத்திக் கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த டாக்டர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் டாக்டர். சந்தோஷ் பால். இவர் தற்போது 'டாக்டர் டெத்'(Dr.Death)என அழைக்கப்படுகிறாராம். இதற்கு காரணம் என்னவென்றால் சந்தோஷ் பால் 5 பெண்கள் உள்பட 6 பேரை கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார் என்பது தான்.
முன்னதாக 49-வயது பெண் ஒருவரை சந்தோஷ் பால் கடத்திக் கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சந்தோஷ் பால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மங்கள் ஜுதே என்ற பெண் புனேவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சதாரா பகுதியில் உள்ள வய் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அவர் பேருந்து ஏறவில்லை. மாறாக அதன் பின்னர் அவர் மாயமாகிவிட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், போலீஸார் மங்க ஜுதேவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

செல்போன் தொடர்பு
மங்கள் ஜுதேவின் செல்போன் செயல்பாடுகளை தீவிரமாக போலீஸார் கண்காணித்தனர். அப்போது, அப்பகுதியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலையில் இருந்து மங்கள் ஜுதேவின் செல்போன் சிக்னல் கிடைத்துள்ளது. செல்போன் சிக்னலை பின் தொடர்ந்த போலீஸார், டாக்டர்.சந்தோஷ் பாலின் வீட்டில் இருந்து தான் அந்த செல்போன் சிக்னல் வருகிறது என்பதை கண்டறிந்தனர்.

நர்ஸிடம் விசாரணை
இது தொடர்பாக சந்தோஷ் பாலின் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர். பால், மங்கள் ஜுதேவை கடத்தி வீரியம் மிக்க மருந்துகளை கொடுத்து கொலை செய்ததாக நர்ஸ் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்

6 பேர் கொலை என அதிர்ச்சி தகவல்
சந்தோஷ் பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்த சில வருடங்களில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 6 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இதில் கொலை செய்யப்பட்ட சிலர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் மாயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட 5 பெண்கள், 1 ஆண் சடலத்தை அவர் தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.

அதிக வீரியம் கொண்ட மருந்துகள்
வீரியம் மிக்க அபாயகரமான மருந்துகளை அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக கொடுத்தது கொலை செய்ததாக சந்தோஷ் பால் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எதற்காக கொலை?
டாக்டர்.பால் எதற்காக அந்த 6 பேரை கொலை செய்தார் என்பது குறித்து தகவல் இல்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.